தொழிலாளி தவறி விழுந்து சாவு
கடையநல்லூர் அருகே தொழிலாளி தவறி விழுந்து இறந்தார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் புலவர் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் ரமேஷ் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று பாம்புக்கோவில் சந்தையில் உள்ள ஒரு வீட்டில் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.