தொழிலாளி தவறி விழுந்து சாவு

மனைவியை அடிக்க முயன்ற தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-10-25 18:45 GMT

கடையம்:

கடையம் அருகே உள்ள மயிலப்பபுரம் அருந்ததியர் காலனி சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 40). கூலித்தொழிலாளியான இவருக்கும் மாரியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கருப்பசாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கருப்பசாமி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது, அவர் தனது மனைவியை அடிக்க முயன்ற போது, வீட்டின் முன் கல் தடுக்கி நிலை தடுமாறி விழுந்தார். இதில் கருப்பசாமிக்கு மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்