பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு - மற்றொருவர் படுகாயம்

பணியின்போது தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார், மற்றோருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-07-05 09:30 GMT

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் செல்வ விநாயகர் கோவில் தெருவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 3 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த மொணிருள் ஷேக் (வயது 24), ரோஹிதுள் ஷேக் (21), அஹ்மிதுள் ஷேக் (25) ஆகியோர் இங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று வழக்கம் போல் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 3 பேரும் இரும்பு கம்பியை கீழ்தளத்தில் இருந்து மேல் தளம் நோக்கி கயிற்றின் மூலம் இழுத்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பியில் இரும்பு கம்பிகள் உரசியதில் 3 பேரையும் மின்சாரம் தாக்கியது. இதில் மொணிருள் சேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கியதில் 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த ரோஹிதுள் ஷேக் பலத்த காயத்துடன் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அஹ்மிதுள் சேக் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்