தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

வயலில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-06-02 15:48 GMT

வந்தவாசி

வந்தவாசி அருகே தூக்குவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 65). விவசாய கூலித் தொழிலாளி.

இவர் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருடன் தனஞ்செழியன் என்பவரது விவசாய நிலத்தில் பயிருக்கு உரமிடும் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த நிலத்தில் இருந்த மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து கிடந்ததை கவனிக்காமல் மின்கம்பியை கோவிந்தசாமி மிதித்துள்ளார்.

இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி வடக்கு போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கோவிந்தசாமியின் மகன் ஏழுமலை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்