காரைக்குடி
சாக்கோட்டை போலீஸ் சரகம் நவதாவு கிராமத்தை சேர்ந்தவர் துரைமாணிக்கம் (வயது 46) தொழிலாளி. சம்பவத்தன்று அவரது குடும்பத்தினர் சிவகங்கை சென்று விட்டனர். இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். துரைமாணிக்கம் மாலை 6.30 மணியளவில் அருகே உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. காலையில் பார்த்தபோது கண்மாய் கரையில் அவர் அணிந்திருந்த செருப்பும் உடைகளும் இருந்தன. துரைமாணிக்கம் கண்மாயில் பிணமாக மிதந்த நிலையில் கிடந்தார். இது குறித்த தகவலறிந்த சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.