ஓமலூர்:
ஓமலூர் அருகே உள்ள மேல் காமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னு. தொழிலாளி. இவருடைய மனைவி குஞ்சம்மாள். இந்த நிலையில் சின்னு வேலைக்கு சென்றுவிட்டு அவரது வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றார். அப்போது நிலை தடுமாறி சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவுவடிவேலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.