தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலியானார்

Update: 2022-10-19 18:45 GMT

கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி மணியிருப்பு கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). கூலி தொழிலாளியான இவர் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள குடிசை வீட்டில் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் தனக்கு சொந்தமான பன்றிகளை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி தண்ணீரில் தவறி விழுந்தார்.இதில், தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அவர் நேற்று காலை அளக்குடி கிராமத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் முட்புதரில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்