கால்வாயில் மூழ்கி தொழிலாளி பலி

கால்வாயில் மூழ்கி தொழிலாளி பலி

Update: 2023-08-11 22:03 GMT

தக்கலை:

தக்கலை அருகே உள்ள ஈத்தவிளையை சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது47), கூலி தொழிலாளி. இவருக்கு செல்வி விக்டோரியா (41) என்ற மனைவியும், லாபின் (15), லிஜோரின் (14) என்ற 2 மகன்களும் உண்டு. சம்பவத்தன்று மாலையில் லாரன்ஸ் முட்டைக்காட்டிற்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றார். அதன் பின்பு அவர் வீட்டுக்கு திரும்ப வரவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மறுநாள் இரவு முட்டைக்காடு டாஸ்மாக் கடை அருகில் உள்ள வள்ளியாறு பாலத்தின் கீழ் உள்ள கால்வாயில் லாரன்ஸ் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கொற்றிகோடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, லாரன்ஸ் மது போதையில் கால்வாய் கரையில் உள்ள சப்பாத்தில் படுத்து தூங்கியபோது தவறி கால்வாயில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.

இதையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சப் -இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்