தொழிலாளி மர்ம சாவு

தொழிலாளி மர்மமாக இறந்தார்.

Update: 2023-07-21 20:10 GMT

திருமங்கலம்

திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் எலியார்பத்தி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னாச்சி மகன் முருகன் (வயது 32). கட்டிட தொழிலாளி. கர்நாடக மாநிலம் பெங்களூரில் வேலை பார்த்து வந்தார். மேலும் அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுசிலா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு எலியார்பத்திக்கு முருகன் வந்தார். இந்நிலையில் நேற்று எலியார்பத்தி வயல்வெளி பகுதியில் முருகன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக கூடக்கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முருகன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்