நாகர்கோவிலில்மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு
நாகர்கோவிலில்மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி இறந்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஆசாரிமார் மேட்டு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 59), தச்சு தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ஒழுகினசேரி பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், முருகன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகன் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.