விபத்தில் தொழிலாளி சாவு

சாயல்குடி அருகே விபத்தில் தொழிலாளி இறந்தார்.

Update: 2023-03-09 18:45 GMT

சாயல்குடி, 

சாயல்குடி அருகே சேரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் (வயது 57) இவர் வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் தினக்கூலி அடிப்படையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். டி.கிருஷ்ணாபுரம் விலக்கு ரோடு அருகே வந்த போது எதிரே வந்த ஜீப் மோதி படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து ஜீப்பை ஓட்டிய வாலிநோக்கம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் அகமது)40) மீது வாலிநோக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்