சிவகிரி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

சிவகிரி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-23 20:08 GMT

சிவகிரி

சிவகிரி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கட்டிட தொழிலாளி

சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையம் தெற்கு வீதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 42). கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி நிர்மலா (38). இவர்களுக்கு ராமித் (13), லலித் (12) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சரவணகுமாரின் வீட்டு முன்பு இருந்த ஆழ்துளை கிணற்றின் மோட்டார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பழுதானது. இதனால் அவர் நேற்று காலை மோட்டாரை சரிசெய்ய முயன்றார்.

மின்சாரம் தாக்கி சாவு

அப்போது மின்கசிவு ஏற்பட்டது. இதனால் சரவணக்குமார் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு சரவணகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சிவகிரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்