மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.

Update: 2023-04-02 18:45 GMT

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் அருகே உள்ள தென்மாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). இவர் திருப்பத்தூரில் உள்ள தனியார் பெயிண்ட் கடையில் ெதாழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கடை ஷட்டர் கதவில் மின்சாரம் கசிந்து இருந்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் கதவை தொட்டபோது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்