மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

பள்ளிபாளையத்தில் டி.வி.யை ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-10-14 19:00 GMT

பள்ளிபாளையம்

தொழிலாளி

பள்ளிபாளையத்தில் உள்ள சங்ககிரி சாலை பாறை ரோடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் டெக்ஸ்டைல் கடையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி காஞ்சனா (50). இந்தநிலையில் நேற்று காலையில் மாணிக்கம் டி.வி.யை ஆன் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் அவர் மீது தாக்கியதாக தெரிகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணை

இதுகுறித்து அவரது மனைவி காஞ்சனா பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிபாளையம் போலீசார் மாணிக்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்