மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்.

Update: 2023-08-11 20:15 GMT

பெரியகுளம் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர், தகர செட் அமைக்கும் வேலை செய்து வந்தார். கடந்த 7-ந் தேதி இவர், பெரியகுளம் அருகே ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள ஒரு கடையில் தகர செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தகரத்தை தூக்கியதில் எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி மீது தகரம் உரசியது.

இதில் குமார் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். பின்னர் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்