சாத்தூர்,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் துரைஅரசன் (வயது 38). இவர் இருக்கன்குடியில் தங்கியிருந்து கிடைக்கும் வேலையை செய்து வந்தார். இந்தநிலையில் இருக்கன்குடி அணைக்கு குளிக்க சென்றவர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கியவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இருக்கன்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.