கல்குவாரியில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
கல்குவாரியில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வைகை அணை அருகே உள்ள முதலக்கம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 43). இவர், குள்ளப்புரத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர், அங்கு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.