கல்குவாரியில் தவறி விழுந்து தொழிலாளிசாவு

தென்காசி அருகே கல்குவாரியில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

Update: 2022-09-12 15:51 GMT

தென்காசி அருகே உள்ள பாட்டப்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் (வயது 48). இவர் பாட்டாக்குறிச்சியில் உள்ள ஒரு கல்குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை அந்த குவாரியில் வெடி வைப்பதற்காக குழி தோண்டும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக கால் தவறி பள்ளத்தில் விழுந்தார். இதனால் அவர் மீது கற்கள் மற்றும் மண் சரிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்