தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

Update: 2023-02-05 20:52 GMT

திருமங்கலம்

விருதுநகர் சிவகாசி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் மாரிசாமி (வயது 50). பட்டாசு தொழிலாளி. இவருடைய உறவினர்கள் கணேசன் (38), போஸ் (36). இவர்கள் 3 பேரும் காரியாபட்டி அருகே உள்ள உறவினர் விசேஷத்திற்கு ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார்சைக்கிளை மாரிசாமி ஓட்டி சென்றார்.

ஆவல் சூரம்பட்டி வளைவில் சென்றபோது எதிரே இருந்த தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மாரிசாமி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். போஸ், கணேசன் ஆகியோர் படுகாயம் அடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்