கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்து தொழிலாளி பலி
கோவில்பட்டியில் கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ராஜூ நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் கார்த்திக் (வயது 38). இவர் கூலி தொழிலாளி. இவர் நேற்று கோவில்பட்டி மெயின் ரோடு பகுதியில் சிறுநீர் கழிக்க சென்ற போது திடீரென்று கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்துள்ளார். சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிழக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார், தீயணைப்பு படை அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் வீரர்கள் சென்று ஓடையில் இருந்து அவரது உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக் காக கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.