தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

காவேரிப்பாக்கம் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.

Update: 2023-01-24 18:36 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வ.உ.சி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 42), தென்னை மரம் ஏறும் கூலி தொழிலாளி. இவர் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே அத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 3 நாட்களாக தென்னை மரம் சீரமைப்பு பணி மற்றும் தேங்காய் அறுக்கும் வேலையை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இவர் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் அறுத்துக் கொண்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செந்தில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து செந்திலின் மனைவி சங்கீதா (36) காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்