3-வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலி
3-வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலியானார்.
வாலாஜாவை அடுத்த அனந்தலை கிராமம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 64), பெயிண்டர். இவர் வாலாஜா தாலுகா மருதாலம் தானியூர் பஜனை கோவில் தெருவில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு பெயிண்டு அடிக்கும் வேலைக்கு சென்றிருந்தார்.
அங்கு மூன்றாவது மாடியில் இருந்து கயிற்றில் தொங்கியபடி பெயிண்டு அடித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கயிறு அறுந்து விஜயன் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.