குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு

குன்றக்குடி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-09-06 18:56 GMT

காரைக்குடி,

ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 33). இவர் கோவிலூரில் தங்கியிருந்து தார் சாலை அமைக்கும் காண்டிராக்டரிடம் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்திற்குள் மூழ்கினார். இதனைக் கட்ட அக்கம் பக்கத்தார் அவரைக்காப்பற்ற முயன்றனர். ஆனாலும் முடியவில்லை ரஞ்சித்குமார் குளத்தின் ஆழ்ப்பகுதிக்கு சென்றுவிட்டார்.இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ரஞ்சித்குமார் உடல் பிணமாக மீட்கப்பட்டது. இது குறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்