அழகியபாண்டியபுரம் அருகே தண்ணீர் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி சாவு

அழகியபாண்டியபுரம் அருகே தண்ணீர் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-03-31 21:53 GMT

அழகியபாண்டியபுரம்:

அழகியபாண்டியபுரம் பெருந்தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமையன் (வயது 65), தொழிலாளி. இவர் தேங்காய் வெட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தெள்ளாந்தி காலனி பகுதியை சேர்ந்த சிவகாமி என்பவரின் தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் வெட்டி விட்டு கீழே இறங்கினார்.

அப்போது அவருக்கு தாகம் ஏற்பட்டுள்ளது. அங்கு வாழைகளுக்கு அடிக்க தண்ணீரில் கலந்து வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை அவர் தண்ணீர் என நினைத்து குடித்து விட்டார். இதனால் அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பூதப்பாண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்