ரெயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு

ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியானார்.

Update: 2023-07-16 19:00 GMT

ஆறுமுகநேரி:

திருச்செந்தூரில் இருந்து நேற்று இரவில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. காயல்பட்டினம்- ஆறுமுகநேரி ெரயில் நிலையங்களுக்கு இடையே வந்த போது, ஒருவர் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அவர் ஆறுமுகநேரி காணியாளர் தெருவை சேர்ந்த பார்வதி முத்து (வயது 32) தொழிலாளி என்பது ெதரியவந்தது. இந்த சம்பவம் குறித்து நெல்லை ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்