வாகனம் மோதி தொழிலாளி சாவு

மானூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.

Update: 2022-06-30 18:39 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள வன்னிக்கோனேந்தலை சேர்ந்தவர் சேரந்தையன் (வயது 56). இவர் ராமையன்பட்டியில் உள்ள ஒரு டீக்கடையில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலையில் ராமையன்பட்டி- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்