டிராக்டர் மோதி தொழிலாளி சாவு

டிராக்டர் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

Update: 2023-07-20 18:45 GMT


மூங்கில்துறைப்பட்டு, 

வடபொன்பரப்பி அருகே உள்ள மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60).தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மனைவி சின்னப்பொண்ணு ( 55) என்பவருடன், மோட்டார் சைக்கிளில் புதுப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்ற அவர், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த டிராக்டர் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த சின்ன பொண்ணு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடபொன்பரப்பிசப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்