உப்பிடமங்கலம் வடக்கு கேட் மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 42). இவர் கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டிலிருந்து கடைவீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பேரூராட்சி அலுவலகம் அருகே எதிர் திசையில் வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நந்தகுமாரை அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நந்தகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.