ஓமலூர்:-
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஆல்ராபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாது (வயது 50). இவர் காமலாபுரம் அருகே தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுஇருந்தார்.
நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் ஓமலூர் பஸ் நிலையம் அருகே தர்மபுரி ரோட்டில் ஒரு ஓட்டலில் மாது மற்றும் அவருடைய நண்பர்கள் சாப்பிட்டு விட்டு ரோட்டுக்கு வந்தனர். அப்போது தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த பஸ் மாது மீது மோதியது.
இதில் மாது சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர்.