காலில் எந்திரம் வெட்டியதில் தொழிலாளி சாவு

காலில் எந்திரம் வெட்டியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-08-25 20:19 GMT

சிவகாசி, 

மதுரையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 60). இவர் ஆனையூரில் நாற்காலிகள், ஷோபாசெட் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடன் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அமல்ராஜ் (55) என்பவர் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று மாலையில் கையில் பிடித்து மரம் அறுக்கும் எந்திரத்தை பயன்படுத்தி மர சாமான்களை அறுத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராமல் எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த பிளேடு அமல்ராஜ் இடது கால் தொடையில் அறுத்துவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்