தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள சிவவிடுதி வடக்குத்தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 51). தொழிலாளி, இவர், சம்பவத்தன்று அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பறந்து வந்த விஷ கதண்டுகள் அவரை கடித்தன. இதில் மயக்கம் அடைந்த முருகேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முருகேசனின் மனைவி செல்வி கொடுத்த புகாரின்பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.