தொழிலாளி சாவு

அய்யம்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2023-06-15 20:20 GMT

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே செருமாக்கநல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதன் (வயது 22). கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மதன் சம்பவத்தன்று வீட்டில் வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்