மாடு முட்டி தொழிலாளி சாவு

கெலமங்கலம் அருகே மாடு முட்டி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-30 18:04 GMT

ராயக்கோட்டை

மாடு முட்டி சாவு

கெலமங்கலம் அருகே உள்ள பேரகப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் ஜல்லிக்கட்டு மாடு ஒன்றை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றவர் மதியம் சாப்பிட வீட்டிற்கு சென்றார். பின்னர் மாடு மேய்க்க சென்றவர் மாலையில் திரும்பி வரவில்லை. அதனால் குடும்பத்தினர் ராஜப்பாவை தேடி சென்றனர். அப்போது கிருஷ்ணப்பாரெட்டி என்பவரது தைலதோப்பில் மாடு கட்டப்பட்டு இருந்தது. சில அடி தூரத்தில் அனுமந்தரெட்டி என்பவரது நிலத்தில் மாடு தாக்கியதில் படுகாயத்துடன் ராஜப்பா இறந்து கிடந்தார்.

விசாரணை

இதுகுறித்து அவரது மகன் ரவி கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்திக்கேயன் வழக்குபதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு மாடு முட்டி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்