தொழிலாளி மர்ம சாவு
ஆத்தூர் அருகே வசிஷ்ட நதி பாலம் பகுதியில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை ஊராட்சி பனந்தோப்பு காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் அவர் தனது மனைவி அமிர்தத்திடம் மது குடிக்க பணம் வாங்கி விட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் ராஜேந்திரன் நேற்று மதியம் காட்டுக்கோட்டை வசிஷ்ட நதி பாலம் அருகே மர்மமாக இறந்து கிடந்தார். ஆத்தூர் ரூரல் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அளவுக்கு அதிகமான மதுபோதையில் பலியானாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.