கார் மோதி தொழிலாளி பலி
சுல்தான்பேட்டை அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ஜியோ தாமஸ். இவர் கடந்த 19-ந் தேதி இரவு 9 மணியளவில் சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிபிரிவு பஸ் நிறுத்த பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென கார் அவரது கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து அந்த வழியாக நடந்து சென்ற மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சச்சின் கயான் என்பவர் மீது மோதியது. தொடர்ந்து பூராண்டாம்பாளையத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் ஓட்டி சென்ற ஆட்டோ மீது மோதியது. இதில் சச்சின் கயான், ஆனந்தராஜ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சச்சின் கயான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனந்தராஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த ஜியோ தாமசை கைது செய்தனர்.