ஏணியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

ஏணியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

Update: 2022-09-18 19:16 GMT

வள்ளியூர்:

பணகுடி அருகே உள்ள தெற்கு வள்ளியூர் அம்மன் கோவில் கிழக்கு தெருவை சேர்ந்த சுடலையாண்டி மகன் முருகன் (வயது 29). இவர் வள்ளியூர் மெயின் ரோட்டில் உள்ள இரும்பு கடை ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அங்கு ஏணியில் ஏறி நின்று வேலை செய்யும்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ஏணியில் இருந்து தவறி முருகன் கீழே விழுந்தார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்