சரக்கு ரெயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு

சரக்கு ரெயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2022-06-10 18:42 GMT

செந்துறை 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குறிச்சிகுளம் காலனி தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 55). இவர் நேற்று உடையான் குடிக்காடு ரெயில்வேகேட் அருகே ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருச்சி மார்க்கமாக செல்லும் சரக்கு ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து கொளஞ்சிநாதன் குடும்ப பிரச்சினை காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அடிபட்டு இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்