ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை

வள்ளியூர் அருகே ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-01 20:19 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நேற்று காலை ஆண் ஒருவர் ெரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் ராதாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த முருகன் (வயது 57), கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது. மேலும் நெல்லை- நாகர்கோவில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரியவந்தது. அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, நம்பிக்கை துரோகிகள் என்று பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் குடும்ப பிரச்சினை காரனமாக தற்கொலை செய்தாரா? என்பது குறித்து ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்