விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நாகை அருகே மனைவி இறந்த துக்கத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-13 18:01 GMT

சிக்கல்:

நாகை அருகே மனைவி இறந்த துக்கத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி

நாகை ஒன்றியம் ஆவராணி ஊராட்சி, கீழ ஆவராணி மேட்டு தெருவை சேர்ந்தவர் குமாரசாமி (வயது65). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி அமிர்தவள்ளி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். குமாரசாமியும், அமிர்தவள்ளியும் தனியாக வசித்து வந்தனர்.

விஷம் குடித்து தற்கொலை

அமிர்தவள்ளி உடல்நலக்குறைவால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உயிரிழந்தார். இதனால் குமாரசாமி மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று குமாரசாமி வீட்டில் இருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குமாரசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சோகம்

இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்