திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை

தக்கலை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்ெகாலை செய்து கொண்டார்.

Update: 2023-10-01 18:45 GMT

தக்கலை:

தக்கலை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்ெகாலை செய்து கொண்டார்.

தொழிலாளி

தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளை பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவருடைய மகன் தினேஷ் (வயது44), தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், வேலை செய்த பணத்தை ஊதாரிதமான செலவழித்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் பல இடங்களில் பெண் பார்த்தனர். ஆனால், மது குடித்து சுற்றித்திரிந்ததால் யாரும் பெண் கொடுக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக தினேஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

தற்கொலை

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு தினேஷ் வீட்டில் விஷம் குடித்து விட்டு வாந்தி எடுத்த நிலையில் காணப்பட்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தினேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் ஆகாத ஏக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்