குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை

சென்னை அருகே குடும்ப தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

Update: 2023-05-04 06:52 GMT

சென்னையை அடுத்த மேடவாக்கம் பாரத் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக பூச்சுக் கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சேகர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்