திருவொற்றியூரில் 15-வது மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை...!
திருவொற்றியூரில் 15-வது மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
சென்னை திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் 9 வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 32). இவரது மனைவி பவித்ரா இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
வெங்கடேசன் பேனர் டிசைனர் தொழில் செய்து வந்தார். கடந்த 5 மாதத்திற்கு முன்பு சாலை விபத்தில் தலையில் அடிபட்டதால் வெங்கடேசன் அடிக்கடி தற்கொலை முயற்சி செய்து வந்து உள்ளார்.
இதனால் அவரது குடும்பத்தினர் டாக்டரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சென்னை மணலி விரைவு சாலை கார்கில் நகர் பகுதியில் புதியதாக கட்டி வரும் குடிசைமாற்று வாரியத்திற்கு சொந்தமாளன 15 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் மேல் இருந்து தொழிலாளி வெங்கடேசன் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தாங்காடு போலீசார் விரைந்து வந்த உயிரிழந்த வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.