தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-10 18:45 GMT

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடை மாற்றும் அறையில் அவர் பிணமாக தொங்கினார்.

தொழிலாளி

தூத்துக்குடி கோயில்பிள்ளை நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் காளிதாஸ். இவருடைய மகன் பிரசாந்த் (வயது 33). இவர் தூத்துக்குடி அனல் மின்நியைத்தில் மெக்கானிக்கல் உதவியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.

பிரசாந்த் கடந்த 11 ஆண்டுகளாக அனல் மின்நிலையத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு அனல் மின்நிலையத்தில் உள்ள பிரைமரி கிரஷர்-2 பகுதியில் பணியில் இருந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இரவு 11.30 மணிக்கு அங்கிருந்து உடை மாற்றும் அறைக்கு பிரசாந்த் சென்று உள்ளார். அங்கு அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அனல் மின்நிலைய மீட்பு படையினர் மற்றும் தெர்மல்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிரசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

இதுகுறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்