தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-25 20:25 GMT

திருச்சி சங்கிலியாண்டபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் மரியசூசைராஜ் (வயது 34). தொழிலாளி. இவரது மனைவி அவிலாஜோன்ஸ் (24). இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மரியசூசைராஜ் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவிலா ஜோன்ஸ் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் அவர் கடந்த 21-ந் தேதி மரியசூசைராஜை சந்தித்தார். அப்போது அவர், தனது மனைவியை திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவிலா ஜோன்ஸ் மீண்டும் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மரியசூசைராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவருக்கு போன் மூலம் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்