தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திருவண்ணாமலையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-12 17:27 GMT

திருவண்ணாமலை நபிகள் நாயகம் தெருவை சேர்ந்தவர் பையாஸ் அகமது என்பவரின் மகன் இம்ரான் (வயது 27), திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடன் தொல்லையால் மனவேதனையில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்