தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

சாத்தான்குளம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-02-21 18:45 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை வள்ளியம்மாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். கூலித் தொழிலாளியான இவருக்கு சரியான வேலை இல்லாததால் கடன் வாங்கியதாக தெரிகிறது. கடனை அடைக்க முடியாமல் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி லிங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சாத்தானகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்