தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கருங்கல் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கருங்கல்,
கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி காஞ்சிரங்காட்டுவிளையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது58), கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது. சம்பவத்தன்று மது போதையில் வந்த அவரை குடும்பத்தினர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த செல்வராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி லீலா கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.