தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ஆரணி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நித்திய பாண்டியன் (வயது 45), தொழிலாளி. இவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நித்திய பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.