திருக்கோவிலூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

திருக்கோவிலூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-10-28 18:45 GMT


திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள நாயனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் சங்கர் (வயது 42). கட்டிட தொழிலாளியான இவருக்கு ஐஸ்வர்யா (38) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். சங்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னைக்கு சென்று கட்டிட கூலி வேலைக்கு சென்று வந்தார். ஐஸ்வர்யா அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்ததாக தெரிகிறது. இ்ந்த நிளலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஐஸ்வர்யா தனது குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு திரும்பி விட்டார். சங்கரும் சொந்த ஊருக்கு வந்து தனது மனைவியிடம் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு சமரசம் பேசியிருக்கிறார். அதற்கு ஐஸ்வர்யா மறுத்துவிட்டதோடு, உறவினர்கள் மூலம் சங்கரை மிரட்டி, அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சங்கர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சங்கர் வீட்டில் இருந்த ஒரு நோட்டில் எனது தற்கொலைக்கு ஐஸ்வர்யா மற்றும் அவருடைய உறவினர்கள் 5 பேர் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. இந்த நோட்டை போலீசார் கைப்பற்றி, அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்