கருங்கல் அருகே நகை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கருங்கல் அருகே நகை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-11 18:45 GMT

கருங்கல்:

கருங்கல் அருகே பாலூர் வெட்டுக்காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 46). நகை செய்யும் தொழிலாளியான இவர் மது பழக்கம் உடையவர். மேலும் இவர் சரிவர வேலைக்கு செல்வதில்லை. இதுதொடர்பாக மனைவி சாந்திக்கும், சுனில்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சுனில்குமார் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்